தென் இந்தியாவிலேயே முதல் பொறியியல் கல்லூரி… பல்கலைக் கழகமாக உயர்ந்த சுவாரசிய வரலாறு…
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அளவில் தொழில்நுட்பத் துறைக்கான ரேங்கிங் வரிசையில் முன்னிலை பெற்றிருக்கும் சென்னை அண்ணா பல்கலைகழகம் தற்போது நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட இருக்கிறது. இத்தகவலைக் கேட்ட பலரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். காரணம் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட வரலாறு அப்படி.
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியை மையமாகக் கொண்டு ஆட்சிப் புரிந்துவந்த ஆங்கிலேயே நிர்வாகம் இங்குள்ள நில அளவு முறைகளை செப்பனிட திட்டமிட்டது. ஆனால் முறையாக நிலத்தை அளப்பதற்கு தேர்ந்த மற்றும் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இந்தியாவில் இல்லை. எனவே இங்கிலாந்தில் இருந்து ஆட்களைக் கொண்டு வரவும் அவர்கள் முயற்சி செய்தனர். பின்னர் அவர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி போன்றவற்றை கணக்கிட்ட கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம், தமிழகத்திலேயே தேர்ந்த ஆட்களை உருவாக்குவதற்கு முடிவு செய்தது. அதற்காக உருவாக்கப் பட்டதுதான் தென்னிந்தியாவின் முதல் சிவில் பொறியியல் கல்லூரி.
கடந்த 1794 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னை செயின்ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் மிச்செல் டோப்பிங் என்ற ஆங்கிலேயர் முதல் சிவில் கல்லூரியை நிர்மாணித்தார். இந்தப் பொறியியல் கல்லூரிதான் தென்னிந்திய அளவில் முதல் பொறியியல் கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் சிவில் பயிற்சியை மட்டும் வழங்கிய இந்தக் கல்லூரி பின்னர் மெக்கானிக் துறைக்கான தேவையையும் உணர்ந்து கொண்டது.
எனவே சிவில், மெக்கானிக் என இரண்டு துறைகளுக்குமான கல்வியை வழங்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் பகுதிக்கு இந்தக் கல்லூரி மாற்றப்பட்டது. சேப்பாக்கத்தில் சிவில், மெக்கானிக் என இரண்டு துறைகளுக்கும் பயிற்சியை அளித்து வந்த இக்கல்லூரி பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் கிண்டி.
இதனால் 1920 வாக்கில் காட்டுப்பகுதியாக இருந்த கிண்டி பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போது தொழில்நுட்பம் சார்ந்த துறைப் படிப்புகளை மட்டுமே வழங்கி வந்த இந்நிறுவனம் 1859-1978 வரை சென்னை பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இயங்கிவந்த சிவில் இன்ஜினியரிங் கல்லூரி பின்னர் முதன் முதலாக, 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி அண்ணா பல்கலைக் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது இந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ் 8 மாணவர்கள் மட்டுமே இருந்தனர் எனபதும் குறிப்பிடத்தக்கது. படிப்படியாக வளர்ந்து வந்த இந்நிறுவனம் பின்னர் 180 ஏக்கர் பரபரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இப்பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் 550 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் சிவில் என ஒரு துறைப் படிப்வுக்காக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 110 துறைப் படிப்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆராய்ச்சி, கட்டுரை வெளியீடு, அறிவுசார் மதிப்பீடு போன்றவற்றில் இந்நிறுவனம் இந்திய அளவில் முக்கியத்துவம் கொண்ட நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
சில நூற்றாண்டுகளைக் கடந்து வளர்ந்து வந்த இந்நிறுவனம் அண்ணா பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இதுவரை 42 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவை கடந்த புதன்கிழமை அன்று தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.
அதில் மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக் கல்லூரிகளை நிர்வாகம் செய்வதற்கு வசதியாக இந்நடைமுறை கொண்டுவரப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அண்ணா- பல்கலைக்கழம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதனால் தற்போது கிண்டியில் இருக்கும் பல்கலைக் கழகம் , அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com