பொறியியல் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சர்ப்ரைஸ்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தவருடம் பொறியியல் செமஸ்டர் எழுதப்போகும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் மே-மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளதால், மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதிக்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தாது என்றும், பிற வருடங்களில் பயிலும் மாணவர்களுக்கே இந்த சலுகை என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுக்களாக பிரிந்து, விவாதித்து பதிலளிக்க கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்குமுன் பல்கலைக்கழகம் 60 நிமிடங்கள் உள்ளடங்கிய, மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கொண்ட ஆன்லைன் தேர்வை நடத்தியது. அப்போது மாணவர்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் விவாதித்து சாமர்த்தியமாக பதிலளித்து உள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
பார்ட்- ஏவில் ஐந்து 2 மதிப்பெண் கேள்விகளும், பார்ட்-பி-யில் ஐந்து 8 மதிப்பெண் கேள்விகளும் அடங்கியிருக்கும். 5 யூனிட்கள் வீதம், ஒவ்வொரு யூனிட்டிலிருந்து 1 கேள்வி கேட்கப்படும். பார்ட்-பி-யில் சாய்ஸ் அளிக்கப்படாததால், மாணவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கோர்சஸ் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கேள்விகள் எளிதில் பதிலளிக்கும் வகையில் இருக்காது. ஆராய்ந்து பதில் கூறும் வகையில் இருப்பதால் அவர்கள் இணையத்தை பார்த்தோ, புத்தகங்களை படித்தோ சிந்தித்து பதிலளிக்கும் வகையில் இருக்கும்.
வேறு வகைகளில் பதிலளிக்க முயன்றாலோ, குழுவில் விவாதித்து பதிலளிக்க முயன்றாலோ அது குற்றமாகும். மாணவர்கள் விடைத்தாளில் பதிலளிக்க 12 பக்கங்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்வுஎழுதிய பின் ஸ்கேன் செய்து விடைத்தாள்களை அனுப்ப வேண்டும். இந்த தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும், 90 நிமிடங்கள் அவகாசம் தரப்படும். மேலும் இறுதியாண்டு பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த முடிவானது கொரோனா சூழலால் எடுக்கப்பட்ட தற்காலிக முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் சார்பாக மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படாது, மூன்று விதமான கேள்வித்தாள்களை வடிவமைத்து மாற்றி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout