ஊழியருக்கு கொரோனா: சென்னை அண்ணாசாலை பிரியாணி கடையை மூடிய போலீசார்!

  • IndiaGlitz, [Wednesday,May 13 2020]

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அந்த கடையை போலீசார் மூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 8ஆம் தேதி கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் தற்போது அங்கு பணி புரியவில்லை என்று கூறி உணவகத்தை தொடர்ந்து நடந்து வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் புகார் அளித்த நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உணவகத்திற்கு வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் உணவக ஊழியர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் நடந்ததை அடுத்து உணவகத்தின் கதவுகளை போலீசார் மூடி அடைத்தனர். மேலும் கொரோனா தொற்றுக்கான படிவத்தை உணவகத்தின் கதவுகளில் ஒட்டிச் சென்றதால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
 

More News

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்

கொரோனா நோய்த்தொற்று எந்தெந்த உடல் உறுப்புகளை, எப்படி பாதிக்கிறது தெரியுமா???

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவும் போது நிமோனியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது

20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்: பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விபட்டதும் பார்த்ததும் இல்லை.

சென்னையில் இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: 5000ஐ நெருங்குவதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக சென்னையில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில்

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நீங்கள் தான்: எடப்பாடியாருக்கு நடிகர்-அரசியல்வாதி வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.