close
Choose your channels

என் பின்பக்கத்தை தட்டினார்கள்: இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!

Friday, December 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தன்னுடைய பின்பக்கத்தை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள் என பகீர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் ’ஹெலன்’. இந்த படம் தமிழிலும் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்றவர் அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கேரளாவில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருந்தபோது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தெரிகிறது

அது மட்டுமின்றி அந்த இரண்டு இளைஞர்கள் மாலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்தனர். என் அம்மா என்னை நோக்கி வந்ததை பார்த்ததும் தான் அவர்கள் விலகிவிட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களை பற்றி சொல்வதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்வது பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது

ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி உள்ளது வெளியே செல்லும் என்னுடைய அம்மா தங்கை தோழிகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன்

இவ்வாறு தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment