இயக்குனர் கனவில் இருந்த 'அஞ்சாதே' நடிகர் திடீர் மரணம்.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

‘அஞ்சாதே’ படத்தில் நடித்த நடிகர் விரைவில் இயக்குனராக போகும் கனவில் இருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு திணறல் காரணமாக காலமாகிவிட்டார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் நரேன் மற்றும் விஜயலட்சுமி நடிப்பில் உருவான திரைப்படம் ‘அஞ்சாதே’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தவர் நடிகர் ஸ்ரீதர். இந்த படத்தில் தன் முன்னே போலீசார் தன் மகளை சுட்டுக் கொள்ளும் காட்சியில் அபாரமாக நடித்திருப்பார். ஷங்கர் இயக்கிய முதல்வன் உள்பட ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீதர் சமீபத்தில் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை பெற்றதாகவும் இதையடுத்து விரைவில் படத்தை இயக்கப் போகிறோம் என்ற கனவில் இருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு திணறல் காரணமாக இன்று அதிகாலை காலமானதாகவும் தெரிகிறது. நடிகர் ஸ்ரீதரின் மறைவு திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.