close
Choose your channels

வயக்காட்டு பம்புசெட்டில் ஜாலி குளியல் போட்ட அஞ்சனா ரங்கன்.. வைரல் வீடியோ..!

Monday, July 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வயல் வெளியில் உள்ள பம்பு செட்டில் குளிப்பது என்பது ஒரு ஜாலியான அனுபவம் என்ற நிலையில் பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வயல்வெளியில் பம்பு செட்டில் குளித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சின்னத்திரையில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளையும் பெரிய திரையின் இசை வெளியீட்டு விழா உள்பட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருபவர் அஞ்சனா ரஞ்சன். குறிப்பாக ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’ஜூனியர் சூப்பர் சிங்கர்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் விஜய் உட்பட பல பிரபலங்கள் படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

’கயல்’ என்ற படத்தில் நடித்த சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அஞ்சனா ரங்கனுக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் இன்ஸ்டாகிராமில் அவர் பிரபலமாக இருப்பதால் தன்னுடைய குடும்பப் புகைப்படம் மற்றும் கிளாமர் புகைப்படம் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் சென்னை அருகே உள்ள ரிசார்ட்டில் வயல்வெளி போன்ற ஒரு இடத்தில் பம்பு செட்டில் குளியல் போடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த வீடியோவின் பின்னணியில் ’சின்ன தம்பி’ படத்தின் பாடல் ஒலிப்பதால் ‘சின்னத்தம்பி 2’ படம் எடுத்தால் நீங்களே நாயகியாக நடிக்கலாம் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment