'போட்டு வைப்போம், எவன் கேக்க போறான்': நடிகைகளுக்கு சவால் விடும் கிளாமரில் அஞ்சனா ரங்கன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் சமீபத்தில் பாண்டிச்சேரி சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கிளாமராக உள்ளதாக கமெண்ட் பகுதியில் பதிவாகி வருகிறது.
சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா ரங்கன் என்பதும் இசை வெளியீட்டு விழா உள்பட பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’ஜூனியர் சூப்பர் சிங்கர்’ ’நட்சத்திர ஜன்னல்’ உட்பட பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் கயல் சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணம் ஆகி குழந்தை பிறந்த போதிலும் அஞ்சனா கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்
அந்த வகையில் தற்போது அவர் தனது குடும்பத்துடன் பாண்டிச்சேரி சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அதன் கேப்ஷனில் ’போனது பாண்டி ஆனால் கோவா மியூசிக்’ ’போட்டு வைப்போம் எவன் கேட்க போறான்’ என்றும் காமெடியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout