என்ன ஆச்சு தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனுக்கு.. சர்ஜரிக்கு பின் வெளியான வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரஞ்சனுக்கு சர்ஜரி செய்யப்பட்ட நிலையில் சர்ஜரிக்கு பின் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் சமூக வலைதளங்களிலும் பிரபலம் என்பதும் குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அஞ்சனா ரங்கன் தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அறுவை சிகிச்சைக்கு பின் மனதளவில் உடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

வீட்டிலும் கவனம் இல்லை, வேலையும் நின்று போனது, ஜிம்மில் செய்த அனைத்தும் வீணாகிவிட்டது, நான் குணமாக ஆறு வாரங்களாகும், சகஜ நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகும் என்றும் டாக்டர்கள் கூறியதால் நான் முற்றிலும் உடைந்து விட்டேன். ஆனால் எல்லாம் சரியாகிவிடும், இது முடிவல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, அக்கறையுடன் என்னிடம் போனில் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து எனக்கு கிடைத்த நீதி என்னவென்றால் எந்த நேரத்திலும் உங்களுடைய சிரிப்பை பிரச்சனைகளால் மட்டும் வலிகளால் இழந்து விடாதீர்கள், இது முடிவல்ல, ஒவ்வொரு வீழ்ச்சியிலும் நமக்கு ஒரு பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அஞ்சனா விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

இதுவரை விற்பனையாகாத தொகை.. 'கங்குவா' பிசினஸில் ஆச்சரியம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ்

சினிமாவில் நடிக்காவிட்டால் செத்துவிடுவேன்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு..!

மத்திய அமைச்சராக இருக்கும் பிரபல நடிகர் சினிமாவில் நடிக்காவிட்டால் நான் செத்து விடுவேன் என்று சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே வாரத்தில் 6 இடங்கள் முன்னேறிய 'சிறகடிக்க ஆசை'.. இந்த வார டிஆர்பி ரேட்டிங் தகவல்கள்..!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகியவற்றில் சீரியல்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்

இன்றுடன் முடிவடைந்த 'ஹார்ட்பீட்' வெப் தொடர்.. ஆனால் உடனே வெளியான நல்ல செய்தி..!

ஹாட் ஸ்டாரில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த 'ஹார்ட் பீட்' என்ற வெப் தொட இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்னொரு நல்ல செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் விரதம்: 48 நாட்களில் உங்கள் பிரார்த்தனை நிறைவேற! விஜய் குமார் சொன்ன ரகசியங்கள்

முருகன் விரதம்: 48 நாட்களில் உங்கள் பிரார்த்தனை நிறைவேற! விஜய் குமார் சொன்ன ரகசியங்கள்