அல்லு அர்ஜூன் கோபத்துடன் மேடையில் இருந்து இறங்க நான் காரணமா? விஜே அஞ்சனா விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவுக்காக சமீபத்தில் அல்லு அர்ஜுன் சென்னை வந்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடைந்த உடன் அனைவருக்கும் நன்றி சொல்லி அல்லு அர்ஜுன் கிளம்பியபோது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சன ரங்கன், ‘புஷ்பா’ பட பாடலுக்கு நடனம் ஆடும்படி கேட்டுக் கொண்டார்
ஆனால் நேரமின்மையாக அஞ்சனாவின் கோரிக்கையை நாகரீகமாக மறுத்த அல்லு அர்ஜுன் அவரது கையை லேசாக தட்டி விட்டு கீழே இறங்கிச் சென்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியது. அஞ்சனா கேட்ட கேள்வியால் தான் அல்லு அர்ஜுன் அவரது கையை தட்டிவிட்டு கோபமாக மேடையை விட்டு இறங்கினார் என்றும் இணையதளத்தில் வதந்திகள் பரவின. இந்த வதந்தி குறித்து தற்போது அஞ்சன ரங்கன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
அந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரை இரண்டு ஸ்டெப் மட்டும் ரசிகர்களுக்காக டான்ஸ் ஆட கேட்டோம் என்றும் ஆனால் நேரமின்மையை மனதில் கொண்டு அவர் அதனை நாகரிகமாக மறுத்துவிட்டார் என்றும் நடந்தது அவ்வளவுதான் என்றும் இதை பெரிதாக்க வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார். அல்லு அர்ஜூன் தான் கேட்ட கேள்வியால் கோபமாக மேடையில் இருந்து இறங்கினார் என்பது தவறான தகவல் என்றும் அவர் கூறியுள்ளார்.
it was already way over time limit and the event was over. We just requested him to dance and he very politely denied with a smile keeping time protocols in mind. As simple as that. Now.. take this tweet and make it a news and gain some attention, like u want?? #slowclaps ?? https://t.co/qI8S2DEp14
— Anjana Rangan (@AnjanaVJ) December 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments