விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்: அஞ்சலியின் அடுத்த பணி ஆரம்பம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
'இறைவி' படத்தை அடுத்து விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நடிகை அஞ்சலி, சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தார் என்பது குறித்து வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் 'சிந்துபாத்'' படத்தின் டப்பிங் பணியை அஞ்சலி தற்போது தொடங்கியுள்ளார். இந்த டப்பிங் பணியை அவர் இன்னும் ஓரிரு நாளில் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் லுக் சமீபத்தில் வெளிவந்தது. விஜய்சேதுபதி, அஞ்சலி இடம்பெற்ற இந்த இரண்டாம் லுக் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)