எனக்கு 4 திருமணங்கள் செய்து வைத்துவிட்டார்கள்.. என் காதலை என் பெற்றோரே நம்பவில்லை: அஞ்சலி

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

எனக்கு சமூக வலைதளத்தில் உள்ளவர்களே நான்கு முறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும் உண்மையாகவே நான் ஒரு பையனை காதலித்து அந்த பையனை என் பெற்றோர் முன்நிறுத்தி இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னால் என் பெற்றோர் கூட நம்ப மாட்டார்கள் என்று சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை அஞ்சலி பேசி உள்ளார்.

அஞ்சலி நடித்த தெலுங்கு திரைப்படமான ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற படம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அஞ்சலி பேசினார். அவர் கூறியதாவது:

ஒரு படத்தில் கஷ்டப்பட்டு நாம் நடிக்கும் போது அந்த படம் ரிலீஸ் ஆகும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதே படம் வெற்றி பெற்றால் பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தோல்வி அடைந்தால் சில நாட்கள் கஷ்டமாகவே இருக்கும் என்று கூறினார்.

மேலும் ’கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’ ராம் இயக்கத்தில் ’ஏழு கடல் ஏழுமலை’ ஆகிய படங்களில் நடிப்பதாகவும், தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்தாலும் என்னை பொறுத்தவரை எல்லாமே சினிமா தான் நான் அப்படித்தான் நான் ஒவ்வொரு கேரக்டரை பார்க்கிறேன் என்று அஞ்சலி கூறினார்

திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அஞ்சலி, ‘சமூக வலைதளத்தில் எனக்கு கிட்டத்தட்ட நான்கு திருமணங்கள் செய்து வைத்து விட்டார்கள், இது போன்ற திருமண வதந்திகள் வரும்போது வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்பட்டனர், ஆனால் சில நாட்கள் மட்டுமே அது பரபரப்பாக இருக்கும், இப்போது எல்லாம் எனது திருமண செய்தி வந்தால் யாரும் கண்டுகொள்வதில்லை, என் பெற்றோரே நான் காதலிக்கிறேன் என ஒரு பையனை கூட்டி கொண்டு சென்றால் நம்ப மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

மேலும் இப்போதைக்கு தனது திருமணம் இல்லை என்றும் 50 படங்களை கடந்துவிட்டாலும் தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கிறேன் என்றும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் அதற்கு பிறகு தான் திருமணம் என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்தார்.