நள்ளிரவில் அஞ்சலி திடீரென போட்ட ட்வீட்.. பாலையா விவகாரத்தில் இப்படி சொல்லிவிட்டாரே?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக நடிகை அஞ்சலியை திரைப்பட விழா ஒன்றின் போது மேடையில் திடீரென தெலுங்கு நடிகர் பாலையா தள்ளிவிட்ட விவகாரம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து நடிகை அஞ்சலி நேற்று நள்ளிரவு திடீரென பதிவு செய்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகை அஞ்சலி நடித்த ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக பாலையா கலந்து கொண்ட நிலையில் மேடைக்கு வந்த அவர் அஞ்சலி இடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை தள்ளிவிட்டார். இதனை அடுத்து சமூக வலைதளங்களில் பாலையாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பாக அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி அருகே சரக்கு பாட்டில் இருந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விவகாரம் குறித்து ஆந்திராவில் உள்ள பெண்ணியவாதிகள் மற்றும் சமூக வலைதள பயனாளிகள் பொங்கி எழுந்த நிலையில் நேற்று திடீரென நடிகை அஞ்சலி நள்ளிரவில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் அந்த ட்வீட்டில் பாலையாவும் நானும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம், ஒருவரை ஒருவர் மரியாதையுடன் பழகி வருகிறோம், என் படத்தின் புரமோஷன் விழாவுக்கு அவர் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, அவருடன் நான் மேடையை பகிர்ந்து கொண்டதற்கு பெருமைப்படுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதள பயனாளிகளுக்கு ஆதரவாக அஞ்சலி பதிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது இந்த ட்வீட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
I want to thank Balakrishna Garu for gracing the Gangs of Godavari pre-release event with his presence.
— Anjali (@yoursanjali) May 30, 2024
I would like to express that Balakrishna garu and I have always maintained mutual respect for eachother and We share a great friendship from a long time. It was wonderful to… pic.twitter.com/mMOOqGcch2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments