close
Choose your channels

இன்றுமுதல் ஆரம்பமாகிறது அஞ்சலியின் ஆக்சன் படம்

Friday, January 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஞ்சலி முதன்முதலாக ஆக்சன் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. இயக்குனர் ஷர்லேஸ் என்பவர் இயக்கும் 'காண்பது பொய்' என்ற படத்தில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் அஞ்சலி ஆக்சன் ஹீரோயின் போன்று போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்ரீஜெய் சாய் மூவீஸ் கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக மெலோடி குயில் ஷ்ரேயா கோஷல் பாடிய ஒரு பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்றுமுதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இயக்குனர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன்பின்னர் பல தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த 'அங்காடித்தெரு, 'தூங்காநகரம்', 'கலகலப்பு', உள்பட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. இந்நிலையில் தற்போது அஞ்சலி மாப்ளே சிங்கம், இறவி, தரமணி, பேரன்பு மற்றும் ஒருசில தெலுங்கு படங்களிலும் அஞ்சலி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment