'அவளுக்கு பழசெல்லாம் ஞாபகம் வராதவரைக்கும் ஆபத்து இல்லை': அஞ்சலியின் 'ஜான்சி' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நடித்த ‘ஜான்சி’ என்ற வெப்தொடர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதன் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அஞ்சலி, இயக்குனர் திரு உள்பட இந்த படத்தின் குழுவினர் கலந்து கொண்டனர். விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’ ’நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்தொடரில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சாந்தினி சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் தொடரின் கதை என்பது ஜான்சி என்ற கேரக்டரில் நடித்துள்ள அஞ்சலி தனது பழைய நினைவுகளை மறந்து விடுகிறார். அவர் தற்போது கணவர், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு பழைய ஞாபகம் வருகிறது .அப்போது அவர் யார்? அவரது எதிரிகள் யார்? என்பது தெரியவருகிறது. இதனை அடுத்து நடைபெறும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த தொடரின் மீதி கதை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடர் இன்று முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments