'புஷ்பா' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மீண்டும் விலைமாது கேரக்டரில் அஞ்சலி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அஞ்சலி மீண்டும் விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியான ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படத்தில் விலைமாது கேரக்டரில் அஞ்சலி நடித்திருந்தார் என்பதும் அந்தப் படத்தில் அஞ்சலியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது ’பஹிஷ்கரன்’ என்ற தெலுங்கு வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ள நிலையில் இந்த தொடரிலும் அவருக்கு விலைமாது கேரக்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 19ஆம் தேதி ஜீ5 தெலுங்கு ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் ராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் அப்பாவியான விலைமாது கேரக்டர் எப்படி பிரச்சனைகளை சமாளித்து முன்னேறுகிறாள் என்பதுதான் கதை என்றும் இது ஒரு கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட தொடர் என்றும் கூறப்படுகிறது.
இந்த தொடர் குறித்து அஞ்சலி கூறியபோது இந்த தொடரில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும், புஷ்பா என்றால் மர்மம் என்றுதான் அர்த்தம், பிரச்சனைகளை புஷ்பா எப்படி சமாளித்து முன்னேறுகிறார் என்பதை ஜீ5 ஓடிடியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த தொடரின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த டீசர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
నిజంగా ఇది జీవిత సత్యమా? ఆ సోకు.. చావు అంచుల వరకు తీసుకుని వెళ్తే? ఏమవుతుంది?
— ZEE5 Telugu (@ZEE5Telugu) July 6, 2024
Thank you
Uaastad director @harish2you garu for launching the teaser.#Bahishkaranahttps://t.co/SioqxTZRi2@PixelPicturesIN @Prashmalisetti @iamprajapathi @yoursanjali @actorshritej @AnanyaNagalla pic.twitter.com/oKreSGCPkT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments