நிஜ கொரில்லாவுடன் நடித்த அஞ்சலி.. வித்தியாசமான 50வது படம்..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

நடிகை அஞ்சலி நடிக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் 'ஈகை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார் என்பதையும் பார்த்தோம்.

அசோக் வேலாயுதம் இயக்கத்தில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில், தருண் குமார் இசையில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கொரில்லா நடிப்பதாகவும் நிஜ கொரில்லாவுடன் அஞ்சலி நடித்த சில காட்சிகளை படமாக்குவதற்காக தான் படக்குழுவினர் தாய்லாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சி அளிக்கப்பட்ட கொரில்லாவுடன் நடிகை அஞ்சலி சில காட்சிகள் நடித்தார் என்றும் அதன் பின்னர் சென்னையில் செயற்கையாக உருவாக்கப்படும் கொரில்லா உடன் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஞ்சலியின் 50வது படமான 'ஈகை’ வித்தியாசமான படமாக அமைவதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அஞ்சலி ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

20 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனராகும் 'பாட்ஷா' பட நடிகர்.. மகன் தான் ஹீரோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி திரைப்படமான 'பாட்ஷா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

திடீரென காவல்துறையில் புகார் அளித்த நடிகை நிரோஷா.. என்ன காரணம்?

நடிகை நிரோஷா திடீரென தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது வீட்டில் திருடு போய்விட்டதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 நாடுகளில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. பக்கா பிளானுடன் களமிறங்கும் மகிழ் திருமேனி..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்தி வராததால்

நடிகை ரம்யா குறித்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி.. நெருக்கமானவர் தகவல்..!

சிம்பு நடித்த  'குத்து' தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா திடீரென்று காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரே ஒரு மனுஷன்.. ஒரே ஒரு பாபா ரஜினி சார்.. 'ஜெயிலர்' வில்லன் விநாயகன் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 600 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.