அனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்
- IndiaGlitz, [Friday,September 01 2017]
12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்து கட் ஆப் 196.7 இருந்தும் அரியலூர் அனிதாவுக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட வேறு என்ன துரதிஷ்டம் இருக்க போகிறது. இன்று ஒரு எதிர்கால மருத்துவர் மரணம் அடைந்துவிட்டார். அவரது குடும்பத்திற்கு என்ன ஆறுதல் கூறினாலும் இழப்பு ஈடாகாது.
இந்த நிலையில் அனிதாவின் துரதிஷ்ட மரணத்திற்கு தலைவர்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து கூறிய கருத்துக்களை பார்ப்போம்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்: மாணவி அனிதாவின் மரணத்திற்கு என்னுடைய இரங்கலை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன். இதுபோன்ற விபரீத முடிவினை யாரும் எடுக்க கூடாது. நீட் தேர்வை எதிர்த்த மாணவி தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.
டிடிவி. தினகரன்: நீட் தேர்வை எதிர்த்து போராடிய அன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி: மாணவி அனிதாவின் தற்கொலையில் அனுதாபம் கொள்ளலாம்; அங்கீகரிக்க முடியாது: கிருஷ்ணசாமி.
எஸ்.வி.சேகர்: தற்கொலை எதற்குமே தீர்வல்ல. போராடி ஜெயிப்பதுதான் வாழ்க்கை. மாணவி அனிதா குடும்பத்தாரின் மீளமுடியா துயரத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீர்.
நடிகர் மனோபாலா: இது தற்கொலை அல்ல..கொலை..
பாடலாசிரியர் விவேக்: இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா?
போங்கடா நீங்களும் உங்க.... .
கார்த்திக் சுப்புராஜ்: மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. அவரது மரணத்திற்கு பதில் கிடைத்தே ஆக வேண்டும். அனிதாவுக்கும் அவரது கனவுகளுக்கும் இரங்கல்கள்.
ஜி.வி.பிரகாஷ்: அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த கொலை.