பிக்பாஸில் இருந்து வெளியேறி புலி, சிங்கமாக மாற விரும்பும் அனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா, ‘ஒரு பெண் இந்த நவீன உலகில் மென்மையாக தான் இருக்க முடியுமே தவிர புலி சிங்கம் சூரியனாக இருக்க முடியாது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் போட்டியாளர்களில் கால்குலேட்டர் என்று வர்ணிக்கப்பட்ட அனிதா சம்பத் வெளியேறியது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், ‘நான் நன்றாகத்தான் விளையாடினேன் என்றும் நான் வெளியேறுவதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறிய அனிதா, பாலாவிடம் ’உன்னுடைய ரசிகர்கள் தான் என்னை வச்சு செஞ்சு இருப்பார்கள் என்றும் அவர்கள் தான் எனது வெளியேற்றத்திற்கு காரணம் என்றும் கூறினார்.
அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த அனிதா, ‘இந்த நவீன உலகத்தில் ஒரு பெண் சத்தமாகவே பேச முடியாது என்றும் இந்த உலகிற்கு பெண்கள் எப்போதுமே மென்மையாக பூ, நிலவு, மயிலாக தான் இருக்க முடியுமே தவிர, எப்போதும் புலி சிங்கம் சூரியனாக இருக்க முடியாது’ என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com