அனிதா சம்பத்தை அழ வைத்த அறந்தாங்கி நிஷா!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளே பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஷிவானிக்கு போட்டியாளர்கள் பலர் புரோக்கன் ஹார்ட்டுகளை அதிக அளவு அவரது கையில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான அடுத்த புரமோவில் அறந்தாங்கி நிஷா குறித்து அனிதா சம்பத் உருக்கமாக கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி நிஷாவை பார்க்கும் போது எனது அம்மாவை பார்ப்பது போல் இருக்கிறது என்றும், எனது அம்மாவும் அவரைப் போலவே டார்க் ஆக இருப்பார் என்றும், அதனால் அவர் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார் என்றும், நான் படிக்கும் பள்ளி கல்லூரிக்கு கூட அவர் வருவதற்கு யோசிப்பார் என்றும் நகை அணியகூட மாட்டார்’ என்றும் கண்ணீருடன் கூறினார்.

ஆனால் அறந்தாங்கி நிஷா தனது டார்க்கையே காமெடி மூலம் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு சாதனை செய்துள்ளதாகவும், எனது அம்மா, நிஷா அக்காவிடம் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பதாகவும் அனிதா சம்பத் மேலும் கூறினார். இதனையடுத்து அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் நிஷா, அவரை கட்டிப்பிடிப்பதுடன் இந்த புரமோ முடிவடைகிறது.