அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவம்: பிக்பாஸ் ரசிகர்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் அவர் ஆரியிடம் கோபப்பட்ட ஒரே காரணத்திற்காக தான் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் 84 நாட்களுக்குப் பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளீயேறி தாய் தந்தை மற்றும் கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் கமல்ஹாசனுடன் விடைபெற்றுச் சென்ற அனிதா சம்பத் வீட்டில் இன்று ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அனிதா சம்பத் சம்பத் அவர்களின் தந்தை ஆர்சி சம்பத் சற்று முன்னர் காலமானார். அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளது
அனிதா சம்பத் தந்தை காலமான செய்தி அறிந்ததும் சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout