close
Choose your channels

விஜய் டிவி சீரியலில் என்ட்ரி ஆகும் அனிதா சம்பத்.. இந்த மூன்று பிரபல சீரியல்களில் எது?

Tuesday, July 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 3 பிரபலமான சீரியல்களின் பெயரை குறிப்பிட்டு இந்த மூன்றில் ஒரு சீரியலில் தான் என்ட்ரி ஆக இருப்பதாக செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் என்பதும் அது மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி’, ’சிறகடிக்க ஆசை’ மற்றும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ஆகிய மூன்று சீரியல்களில் ஒன்றில் தான் விரைவில் என்ட்ரி ஆக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அனிதா சம்பத் எந்த சீரியலில் என்ட்ரி ஆகப் போகிறார் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். இருப்பினும் இந்த குழப்பத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியலட்சுமி’, ’சிறகடிக்க ஆசை’ மற்றும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ஆகிய மூன்று சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் உள்ளது. எனவே இவற்றில் எந்த சீரியலில் அனிதா சம்பத் என்ட்ரி ஆகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment