ரம்யாவை திட்டிய நெட்டிசன்களுக்கு அனிதா சம்பத் பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் இன்னும் விமர்சனம் செய்து வருகையில் அந்த விமர்சனம் குறித்து அனிதா சம்பத் தனது சமூக வளைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்
பிக்பாஸ் வின்னர் ஆரி குறித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ரம்யா கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவரை விமர்சனம் செய்ததால் ஆரியின் ஆதரவாளர்கள் ரம்யாவை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியே வந்த பின்னரும் சரி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்த விமர்சனத்திற்கு முதலில் ’அது அவர்களுடைய கருத்து’ என பதில் கூறிய ரம்யா, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் ’பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது, எனவே அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை தயவுசெய்து திட்டாதீர்கள். நம்முடைய கடமை அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும் என்பதுதான். ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்
இந்த பதிவை பார்த்த அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் போட்டியாளர்களை விமர்சனம் செய்யும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது ’பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு. அது முடிந்துவிட்டது. பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களுடன் இருக்கும் போது மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்போது வெளிப்பட்ட சில குணங்கள் தினசரி வெளிப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தை பற்றியும் நெகட்டிவ் கமெண்ட் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள்
இவ்வாறு விமர்சனம் செய்வதால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? ஒரு மெசேஜ் போட்டு விட்டு நீங்கள் உங்கள் வேலையை பார்க்க போய் விடுவீர்கள். ஆனால் அந்த மெசேஜை படிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு மனம் நொந்து போகும் என்பதை யோசித்துப் பாருங்கள். எல்லோரும் அவர்களுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள், தங்களை மாற்றிக் கொள்வார்கள்
அனைத்து போட்டியாளர்களையும் ரசிக்க பிக்பாஸ் ஒன்றும் ’குக் வித் கோமாளி’ மாதிரி கிடையாது. பிக்பாஸில் இருக்கும் எல்லோரையும் நீங்கள் ரசிக்க முடியாது. இதை ஒரு விளையாட்டாக மட்டும் பாருங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசாமல் அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். அனிதாவின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout