போல்ட் அண்ட் பியூட்டிபுல் தோழியுடன் நான்: பிக்பாஸ் அனிதாவின் வைரல் பதிவு
- IndiaGlitz, [Thursday,January 21 2021]
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த சீசனில் ஆரி வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் வெற்றி பெற்றார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் அனிதா மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் என்பதும், இருவருமே தங்கள் மனதில் தோன்றியதை தைரியமாக பேசியதால் சர்ச்சைக்கு உள்ளான போதிலும் பெரும்பாலான மக்களின் மனதில் இடம்பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் சிறந்த தோழிகளாக இருந்தனர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் தங்களது நட்பை அனிதா மற்றும் சனம்ஷெட்டி தொடர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் அனிதா தனது சமூக வலைத்தளத்தில் ’போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் தோழியுடன் நான்’ என்று சனம்ஷெட்டியுடன் உள்ள ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த சனம்ஷெட்டி கூறியதாவது: மிக்க நன்றி அனிதா. பிக் பாஸ் மூலம் ஒரு அன்பான தோழியை கண்டுபிடித்தது எனக்கு அதிர்ஷ்டம். நீங்கள் இங்கு செய்யும் எல்லாவற்றிலும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களை பற்றிய அழகிய நினைவுகள் எப்போதும் எனக்கு இருக்கும். நீங்கள் பெற்ற விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த விருது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது’ என்று பதிவு செய்துள்ளார்.
அனிதாவின் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட் அளித்து வரும் நிலையில் நீங்கள் இருவரும் தான் உண்மையான பிக் பாஸ் வின்னர்கள் என்றும், நிஜ சிங்கப்பெண்கள் என்றும், உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுவதாகவும் பலர் பதிவு செய்து வருகின்றனர்