பிக்பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்: அனிதாவின் அதிர்ச்சி தகவல்கள்!

பிக்பாஸ் வீட்டில் தான் பேசிய முக்கிய தகவல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று ஏற்கனவே கஸ்தூரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அனிதாவும் அதே குற்றச்சாட்டை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனிதா கூறியபோது ’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு டாப்பிக் குறித்து பேசினேன். ஆனால் அது எதுவுமே டெலிகாஸ்ட் ஆகவில்லை. மற்ற போட்டியாளர்களுடன் நான் பேசிய முக்கிய நிகழ்வுகளும் ஒளிபரப்பாகவில்லை.

திங்கட்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளின் தரம் உயர்வது பற்றியும், புதன்கிழமை பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்தும், வெள்ளிக்கிழமை விதவைகளின் மறுமணம் குறித்தும் நான் பேசினேன். ஆனால் இவை எதுவுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை.

இருப்பினும் விரைவில் நான் சமூகவலைதளங்கள் மூலம் இது குறித்து பேச விரும்புகிறேன். இதற்காக எனக்கு உதவிக்கு சில நபர்களும் தேவைப்படுகிறார்கள். என்னுடன் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வரும் பிப்ரவரியில் இருந்து இதை நாம் தொடங்குவோம் என்று அனிதா சம்பத் கூறியுள்ளார்.

அனிதாவின் இந்த சமூக வலைதள பதிவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

அடுத்த படம் குறித்து செல்வராகவனின் முக்கிய தகவல்!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் இயக்காத நிலையில் தற்போது அடுத்தடுத்து தனது படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் 

ஃபினாலே டாஸ்க்: பாலாஜியை வெறுப்பேற்ற வேற லெவல் கேம் ஆடும் கேபி!

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் நேற்று இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் மூன்றாவது சுற்று நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது 

ரூ.36 கோடிக்கு வீடு வாங்கிய 4 படங்கள் மட்டுமே நடித்த நடிகை!

நான்கு படங்கள் மட்டுமே நடித்த ஒரு நடிகை ரூபாய் 36 கோடிக்கு மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

100% ஐ விட 50% சிறந்தது: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் கருத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏழு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது

ஃபினாலே டாஸ்க்: சோம் உடன்  காரசார விவாதம், தனக்கான இடத்தை வாதாடி பெற்ற ஆரி!

பிக்பாஸ் வீட்டில் இன்று ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் மொத்தம் 5 சுற்றுகள் உள்ளன என்பதும் 5 சுற்றுகளிலும் சேர்ந்து முதலிடத்தை பிடித்தவர் நேரடியாக ஃபினாலேவுக்கு தகுதி