பிக்பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்: அனிதாவின் அதிர்ச்சி தகவல்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் தான் பேசிய முக்கிய தகவல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று ஏற்கனவே கஸ்தூரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அனிதாவும் அதே குற்றச்சாட்டை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனிதா கூறியபோது ’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு டாப்பிக் குறித்து பேசினேன். ஆனால் அது எதுவுமே டெலிகாஸ்ட் ஆகவில்லை. மற்ற போட்டியாளர்களுடன் நான் பேசிய முக்கிய நிகழ்வுகளும் ஒளிபரப்பாகவில்லை.
திங்கட்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றியும், செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளின் தரம் உயர்வது பற்றியும், புதன்கிழமை பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்தும், வியாழக்கிழமை விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்தும், வெள்ளிக்கிழமை விதவைகளின் மறுமணம் குறித்தும் நான் பேசினேன். ஆனால் இவை எதுவுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை.
இருப்பினும் விரைவில் நான் சமூகவலைதளங்கள் மூலம் இது குறித்து பேச விரும்புகிறேன். இதற்காக எனக்கு உதவிக்கு சில நபர்களும் தேவைப்படுகிறார்கள். என்னுடன் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வரும் பிப்ரவரியில் இருந்து இதை நாம் தொடங்குவோம் என்று அனிதா சம்பத் கூறியுள்ளார்.
அனிதாவின் இந்த சமூக வலைதள பதிவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments