தங்கையை இழந்த மனவலி எனக்கும் தெரியும்: அனிதா அண்ணனிடம் விஜய்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார் என்பதும், அவர் சிறுவயதில் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அனிதாவின் வீட்டுக்கு சென்ற விஜய், அவருடைய அண்ணனிடம் தங்கை இழந்த மனவலி எனக்கும் தெரியும் என்று கூறியதாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் காரணமாக மெடிக்கல் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கிவிட்டது. தங்கள் வீட்டு பெண் இறந்ததை போல தமிழகமே கண்ணீரில் மூழ்கியது.

இந்த நிலையில் அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூற தளபதி விஜய் நேற்று அரியலூர் சென்றார். விஜய்யின் விசிட் குறித்தும், அவர் தங்களிடம் கூறியது குறித்தும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறியதாவது:

உங்களது கண்ணீர்  நாளை ஆனந்தக் கண்ணீராக மாறப்போகிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். ஆனால், நான் வந்தால், அந்த நிகழ்வின் போக்கே வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டுவிடும் சூழல் இருந்ததால் வராமல் தவிர்த்துவிட்டேன்

எனக்கும் வித்யா என்று  ஒரு தங்கை இருந்தாள். அவள் இறந்துவிட்டாள். அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. அதனால், இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவை என் தங்கையாகத்தான் பார்க்கிறேன். என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் செய்கிறேன். அனிதாவுக்கு நானும் ஒரு அண்ணன்தான் என்னிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்' என்று விஜய் கூறியுள்ளார்.

மேலும் அனிதாவின் தந்தையிடம் விஜய் பணம் கொடுத்ததாகவும், எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் மணிரத்னம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

'100% காதல்' படத்தின் நாயகி திடீர் மாற்றமா?

ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 100% காதல்'. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 100% லவ்' என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

சசிகலா நியமனம் ரத்து: தினகரன் நியமனங்கள் செல்லாது: அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்

அதிமுக பொதுகுழுவுக்கு தடை விதிக்க தினகரன் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து இன்று காலை அதிமுக பொதுக்குழு சென்னையில் தொடங்கியது.

ஒரே மாதத்தில் இரண்டு விஷால் படங்கள் ரிலீஸ்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய த்ரில் திரைப்படம் 'துப்பறிவாளன்' வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

த்ரிஷாவின் முன்னாள் காதலரின் திருமணம்

பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் மற்றும் நடிகை த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

ராய்லட்சுமி நடித்த 'ஜூலி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

கோலிவுட் நடிகை ராய்லட்சுமி அறிமுகமாகியுள்ள பாலிவுட் திரைப்படமான 'ஜூலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது