வெளியே வந்த அனிதாவின் முதல் பதிவு: என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குரூப்புகளில் எந்த குரூப்புகளிலும் சேராமல் தனது கருத்தை தைரியமாக முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அர்ச்சனாவின் அன்பு குரூப்பை கடந்த வாரம் அவர் உடைத்த போது அவரை நெட்டிசன்கள் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை திடீரென ஆரியுடன் மிகவும் ஆவேசமாக பேசியது பார்வையாளர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் காரணமாகத்தான் இன்று அவர் குறைந்த வாக்குகள் இன்று பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டதாக ஏற்கனவே தகவல் வந்துள்ள நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் முதல் முதலாக பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பின் ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘அனைத்திற்கும் நன்றி’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அனிதா சம்பத்தின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் வழக்கம்போல் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks for everything ????
— Anitha Sampath (@anithasampath_) December 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments