தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க: அனிதா வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அனிதாவின் தந்தையார் சம்பத் அவர்கள் சமீபத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் இந்த துயரத்தில் இருந்து மீள முடியாத அனிதா, தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன். பிக்பாஸ் குவாரண்டைன் போகும்போது எடுத்தது. அப்பானா எனக்கு உயிரு. எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன். எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி.
ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன். உன்ன வழியிலயே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் இருப்பேன். நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப. சாரி டாடி, என்னால உன்ன காப்பாத்த முடியல. வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி என்ன விட்டு போகாது.
எங்க போன ராசா... என்று பதிவு செய்துள்ளார்.
பின்குறிப்பாக அனிதா மேலும் கூறியபோது, ‘இதை என் ஃபாலோயர்ஸ் கிட்டதான் எக்ஸ்பிரஸ் பண்றேன். இதையும் வீடியோ பண்ணி வேற மாதிரி தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க ப்ளீஸ். எனது வலியை உணர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments