யாருக்கு எங்கள் வாக்கு? கமலுக்கு 'நீட்' அனிதா சகோதரரின் பதிவு

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

12ஆம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், கட் ஆப் மார்க் 196.7 இருந்தும் அரியலூர் அனிதாவுக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் நீட் தேர்வில் அவர் போதிய மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

அனிதாவின் மரணத்திற்கு முதல்முதலில் குரல் கொடுத்தவர் கமல்ஹாசன் தான். மேலும் அனிதாவின் குடும்பத்தினர்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார். இந்த நிலையில் அனிதாவின் சகோதரர் மணிரத்னம், தனது முகநூலில் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார். கமல் ரசிகன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு கமலுக்கு எதிரான ஒரு கட்சிக்கு அவர் வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளது கமல் கட்சியினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அனிதாவின் அண்ணன் மணிரத்னத்தின் முகநூல் பதிவு இதுதான்:

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்... நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன்,மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்.. ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்...

அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்.. புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்... அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.. #பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது,என்பதில்......

அனிதா இறந்த போது திருமாவளவன் இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்.. மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி,
தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே..

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே...

என்றும் #கமல்_ரசிகன்

இவ்வாறு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

More News

என்னால் நம்பவே முடியவில்லை: ரித்தீஷ் மரணம் குறித்து விஷால்

நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் சற்றுமுன் ராமநாதபுரத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி திரையுலகில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரித்தீஷ் இதயத்தில் மீண்டும் துடிப்பு இருந்ததா? பரபரப்பு தகவல்

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷீக்கு இன்று பிற்பகலில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்

அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்: வைரலாகும் ரஜினி பேரனின் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளின் மகன் வேத் புகைப்படங்கள் ஒருசில சமூக வலைத்தளத்தில் வைரலானது. ரஜினியின் ஸ்டைலில் இருக்கும்

நடிகர், அரசியல்வாதி ஜே,.கே.ரித்திஷ் காலமானார்

முன்னாள் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46

சூர்யா-சுதாகொங்காரா படத்தின் வித்தியாசமான டைட்டில்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது