கள்ளக்குறிச்சி விசிட் செய்த விஜய்யை கேலி செய்தேனா? அனிதா சம்பத் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று காலை இது குறித்து தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த விஜய், அதன் பின்னர் நேற்று மாலை நேரடியாக கள்ளக்குறிச்சி சென்று கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இந்த புகைப்படம் ஒன்றுக்கு நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் தனது சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்திருந்தார். பாதிக்கப்பட்டவர்கள் போர்க்களத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு நெஞ்சில் குண்டடிபட்டவர்களா? என்று அவர் பதிவு செய்திருந்த நிலையில், அவரது இந்த பதிவு சில ஊடகங்களால் விஜய்க்கு எதிராக அவர் பேசியதாக திருப்பி விடப்பட்டன.
இதனை அடுத்த விஜய் ரசிகர்கள் அனிதா சம்பத்தை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இது குறித்து அனிதா சம்பத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். என்னோட பதிவு விஜய் பற்றியது இல்லவே இல்லை, அவரை நான் தப்பாக எங்கேயும் சொல்லவில்லை, அவரது அரசியல் வருகைக்கு உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால் மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் காசை கொண்டு போய் கள்ளச்சாராயம் குடிக்கிறேன் என்று போய், மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பவர்களை மீடியா தியாகி மாதிரி காட்டுவதை தான் நான் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். விஜய்யை பற்றி எதுவும் தவறாக கூறவில்லை.
உலகத்தில் எத்தனையோ பேர் 5, 10 ரூபாய் என்று சிறுக சிறுக சேர்த்து வைத்து பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள், அப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்கிற நம்ம ஊரில் தான் இப்படி ஊதாரித்தனமாக சுத்துறவங்களை பார்க்கிறப்ப ஆதங்கமா தான் இருக்கின்றது. இறந்தவங்க பாவம்ன்னு சொல்றத விட , அவங்க மனைவி மற்றும் பிள்ளைகள் தான் பாவம், கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
என்னுடைய பதிவை உண்மையாக புரிந்து கொண்டவர்களுக்கு எனது நன்றி’ என்று பதிவு செய்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout