விஜய்சேதுபதி கவலைப்பட வேண்டாம்: ஆறுதல் சொன்ன அனிருத்

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

விஜய் நடித்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விழா நாயகன் அனிருத் பேசியதாவது:

விஜய்சேதுபதி அவர்கள் இந்த படத்தில் மிரட்டியுள்ளார். அவருடைய கேரக்டருக்கு நல்ல தீம் மியூசிக் போட்டுவிடுகிறேன். எனவே அவர் கவலைப்பட வேண்டாம். அர்ஜுன் தாஸை எனக்கு கல்லூரி காலத்தில் இருந்தே தெரியும். அவர் இந்த படத்தில் பணிபுரிந்தது எனக்கு மிகவும் சந்தோசம்

மாளவிகா மோகனன் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாஸ்டர் படம் பற்றிக் கூற வேண்டும் என்றால் இயக்குனர் லோகேஷ் அவர்கள் இயக்கிய முந்தைய இரண்டு படங்களிலும் பாடல்கள் வாங்கி படப்பிடிப்பு சென்றதே கிடையாது. அதனால் எனக்கு ரொம்ப வசதியாக இருந்தது. அவர் இயக்கிய இரண்டு படங்களிலும் பாடல்கள் இல்லை என்பதால் இந்த படத்தில் முதலில் எத்தனை பாடல்கள் என்று கேட்டபோது 12 பாடல்கள் வேண்டும் என்று கூறினார். அத்தனை பாடல்களையும் அவருக்கு கொடுத்துவிட்டேன். இன்று 8 பாடல்கள் ரிலீசாகிறது. மீதி பாடல்கள் விரைவில் நிறைவேறும். லோகேஷ் அவர்களுடனான முதல் சந்திப்பிலேயே நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டோம்

எனது இசை வாழ்வில் முதல் முதலாக ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றால் தளபதி விஜய்யின் கத்தி திரைப்படம் தான். கத்தி முடிந்த பிறகு ஒருசில ஆண்டுகள் கழித்து மீண்டும் மாஸ்டர் படத்தில் சேர்ந்து உள்ளோம். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து இருக்கிறேன் என்று நம்புகிறேன்

விஜய் அவர்கள் மிகவும் ஒரு இனிமையான மனிதர். அனைவரிடமும் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். எங்களுடைய இசையை அவர் நிச்சயம் விரும்புவார் என்று எதிர்பார்க்கின்றேன். விஜய் நடிக்கும் அனைத்து படங்களுமே ஒரு மைல்கல்லாக தான் இருக்கும். இந்த படத்தில் நாங்கள் இருப்பதால் நிஜமான மைல்கல்லாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் ஒரு பாடலைப் பாடி உள்ளார்கள். எந்தவிதமான ஈகோவும் இன்றி அவர்கள் பாடி கொடுத்ததற்கு அவர்களுக்கு மிகவும் நன்றி’ என்று அனிருத் கூறினார்

More News

மாஸ்டர் பாடல் எழுதிய அனுபவம்: பாடலாசிரியர்களின் பேச்சு

தளபதி விஜய் நடித்த ''மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ் மற்றும் விஷ்ணு ஆகியோர் பேசினர்.

மாஸ்டர் விழாவில் சாந்தனு கூறிய குட்டி ஸ்டோரி

மாஸ்டர் ஆடியோ விழாவில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேசியதாவது:

விஜய் நடிப்பு குறித்து பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை: அர்ஜூன் தாஸ்

விஜய் நடித்த மாஸ்டர் பட விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது: விஜய் நடித்த முந்தைய படங்களின் ஆடியோ விழாவில் கலந்துகொள்ள பாஸ் கிடைக்குமா

ஈசிஆர் பக்கம் ரெய்டுக்கு போகாதீங்க: கேபிஒய் தீனா

கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் நடித்த தீனா, 'மாஸ்டர்' ஆடியோ விழாவில் பேசியதாவது:

தாயின் வேண்டுகோளை மேடையிலேயே நிறைவேற்றிய விஜய்!

தளபதி விஜய் நடித்த ''மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இருக்கும் இந்த விழாவில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர்