எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டன. முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

சமீபத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் இந்த படத்தில் பணிபுரிந்த உள்ளதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அனிருத் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளதாக கருதப்பட்டது. தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், மதன்கார்க்கி எழுதியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் எம்எம் கீரவாணி உடன் அனிருத்தும் இருப்பது போன்ற ஸ்டில்லும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கான், ஆலியா பட், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.