ஒருநாள் இவர் வெற்றிகரமான இயக்குனர் ஆவார்: அனிருத் பாராட்டிய நபர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொறுத்திருந்து பாருங்கள், இவர் ஒரு நாள் நிச்சயம் வெற்றிகரமான இயக்குனர் ஆவார்’ என அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ பட உதவி இயக்குனர் ஒருவரை பாராட்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழ் திரை உலகில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை மிக முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடாவன் என்பவரை பாராட்டி அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் எழுதியது இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனிருத் தனது டுவிட்டரில் ’விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற போர் கண்ட சிங்கம் மற்றும் டைட்டில் பாடலை எழுதியவர் இந்த விஷ்ணு தான். பொறுத்திருந்து பாருங்கள்! கண்டிப்பாக ஒருநாள் இவர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திரையுலகில் வலம் வருவார்’ என்று புகழ்ந்துள்ளார். அனிருத்தின் கணிப்பு சரியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
A special tweet for @VishnuEdavan1 , who wrote lyrics for the Vikram title track and both versions of Porkanda Singam. Watch out for this talent. A successful director in the near future who has an awesome lyrical sense ??
— Anirudh Ravichander (@anirudhofficial) July 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments