close
Choose your channels

அனிருத்தின் 'ரம்'முக்கு ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்து

Monday, February 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் 'பீப்' பாடல் விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் கிட்டத்தட்ட அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள அவர் சமீபத்தில் 'ரம்' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


தனுஷின் 'விஐபி' படத்தில் தம்பி கேரக்டரில் நடித்திருந்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ரம்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கவுள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சாய்பரத் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்ற நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் அனிருத் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் சின்னக்கலைவாணர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தனுஷின் மனைவியும், அனிருத்தின் உறவினருமான ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment