அனிருத்தின் 'ரம்'முக்கு ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்து

  • IndiaGlitz, [Monday,February 22 2016]

கடந்த சில நாட்களுக்கு முன் 'பீப்' பாடல் விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் கிட்டத்தட்ட அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள அவர் சமீபத்தில் 'ரம்' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


தனுஷின் 'விஐபி' படத்தில் தம்பி கேரக்டரில் நடித்திருந்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ரம்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கவுள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சாய்பரத் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்ற நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் அனிருத் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் சின்னக்கலைவாணர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தனுஷின் மனைவியும், அனிருத்தின் உறவினருமான ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புத்திர சோகம் -- வாழ்வை சிதைக்கும் பேரிடர் : விவேக் உருக்கம்

இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி...

கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்

கடந்த ஆண்டு இறுதியில் அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்பட்ட பீப் பாடலில் ஆபாச வார்த்தைகளும்...

முதன்முதலாக 'தெறி' விஜய்யுடன் இணைகிறார் அதர்வா

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்து இணையதள வரலாற்றில்...

திமுக-அதிமுகவுடன் கூட்டணி கார்த்திக் எடுத்துள்ள முக்கிய முடிவு

பிரபல நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவருமான கார்த்திக், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது...

4 நாள் வேலையை ஒரே நாளில் முடித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்து ரஜினிகாந்த்...