அஜித் 57' படத்தின் இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Friday,January 29 2016]

'வேதாளம்' வெற்றி படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தை இயக்குவது சிறுத்தை சிவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் அனைவரும் அறிந்ததே.,


இந்நிலையில் ஓய்வுக்காக அஜித் வெளிநாடு சென்று திரும்பியதும் வரும் ஜூன் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஜித்தின் 57வது படத்திற்கும் 'வேதாளம்' இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

சிறுத்தை சிவா தனது முந்தைய படங்கள் போலவே ஃபேமிலி செண்டிமெண்ட் + ஆக்சன் கலந்து திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும், இந்த படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களையும் அவர் தேர்வு செய்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. மீண்டும் அஜித்-அனிருத் இணைவதால் 'ஆலுமா டோலுமா'க்கு நிகரான ஒரு பாடலை இந்த படத்திலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.