டிடிஎஃப் வாசனின் 'மஞ்சள் வீரன்' படத்தில் இணைந்தாரா அனிருத்?

  • IndiaGlitz, [Sunday,July 23 2023]

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் ’மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ போஸ்டர் வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டிடிஎஃப் வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட்டில் சீறிப் பாய்வது போல இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் யூடியூப் மூலம் பிரபலமான அமலா சாஜி நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுக பாடலை அனிருத் பாட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.