கவின் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் அனிருத்: நாயகியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,May 26 2023]

’டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதோடு இந்த படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் மற்றும் சதீஷ் இணையும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கவின் ஜோடியாக அயோத்தி பாடத்தில் நடித்த பிரீத்தி அஸ்ராணி நடிக்க உள்ளார் என்பதும் அவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக இசையமைப்பாளர் அனிருத், ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் அளித்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள்..!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஜப்பான் சென்ற நிலையில் அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு சர்ப்ரைஸ் அளித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லிவ்-இன் உறவிலிருந்த பெண்ணை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்… ஃப்ட்ரிஜில் வைத்து பாதுகாத்த கொடூரம்!

ஹைதராபாத்தில் வசித்துவந்த நபர் ஒருவர் தன்னுடன் லிவ்-இன் உறவுமுறையில் வாழ்ந்துவந்த பெண்ணையே கொன்று அவருடைய உடலை 6 துண்டுகளாக வெட்டி

மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் “டைகர் நாகேஸ்வர ராவ்”  ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு  “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

கேன்ஸ் விழாவில் ஒரு மஞ்சள் மேகம்… மணிரத்னம் பட நடிகையை கொண்டாடும் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா

60 வயதில் திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி.. முதல் மனைவியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' தளபதி விஜய் நடித்த 'கில்லி' உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தற்போது 60 வயதில்