ரஜினி மாஸ் ஓபனிங் பாடலை முடித்துவிட்ட அனிருத்.. பிரம்மாண்டமான செட்டில் படப்பிடிப்பு..!
- IndiaGlitz, [Monday,April 15 2024]
நீண்ட இடைவெளிக்கு பிறகு ’அண்ணாமலை’, ’பாட்ஷா’ மாதிரி ’வேட்டையன்’ படத்தில் ரஜினிக்கு ஒரு மாஸ் ஓபனிங் பாடல் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடல் தற்போது தயாராகி விட்டதாகவும் இந்த பாடலை முழுமையாக கம்போஸ் செய்து இசையமைப்பாளர் அனிருத், இயக்குனரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து இந்த பாடலின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறும் என்றும் இதற்காக சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினி வரும் ஜூன் மாதம் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதால் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து ’வேட்டையன்’ வட்டாரத்தில் விசாரித்த போது ரஜினி, பகத் பாஸில் காம்பினேஷன் ரகளையாக இருக்கும் என்றும் இந்த காம்பினேஷன் இதுவரை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பாக இருவரும் சேர்ந்து காமெடியில் கலக்க இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு அமிதாபச்சன் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் ரஜினி மற்றும் அமிதாப் இருவரும் இணையும் இடத்தில் ஒரு பெரிய திருப்பமே கதையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என ஒரு நட்சத்திர பட்டாளமே ’வேட்டையன்’ படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.