'லியோ லியோ லியோ': விஜய்க்காக அனிருத் கம்போஸ் செய்த 4வது ஆங்கில பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ’ படத்தின் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவின் பின்னணி இசையை அனிருத் பட்டையை கிளப்பி உள்ளார் என்பது இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்
விஜய் - அனிருத் இணைந்த படம் என்றாலே அந்த படம் பாடல்களுக்கு சூப்பர் ஹிட் என்பது தெரிந்தது. அந்த வகையில் ’கத்தி’ ’மாஸ்டர்’ ‘பீஸ்ட்’ ஆகிய மூன்று படங்களில் உள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி ’கத்தி’ படத்தில் Sword of Destiny, ‘மாஸ்டர்’ படத்தில் Master the blaster மற்றும் ’பீஸ்ட்’ படத்தில் Big Bad Beast என மேற்கண்ட 3 படங்களிலும் விஜய்க்காக ஸ்பெஷலாக ஒரு ஆங்கில பாடலை அனிருத் கம்போஸ் செய்திருந்தார். இந்த நிலையில் ’லியோ’ படத்திலும் ‘லியோ லியோ லியோ’ என்ற பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ள நிலையில் இந்த பாடல் செமையாக இருப்பதாக ரசிகர்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆங்கில பாடலின் வரிகள் இதோ:
I’m fireproof
there’s nothing you can do
So run away
Cause I’m here to stay
You hear me now?
You don’t wanna be my prey
I’ll break you down
You wouldn’t last a day
I'm gonna take it away
I'm gonna take it away.. hell yeah
I'm gonna take..It away..
Leo Leo Leo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments