அனிருத் அட்டகாசமாக கம்போஸ் செய்த 'இந்தியன் 2' பாடல்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கான அட்டகாசமான ஒரு பாடலை கம்போஸ் செய்வது, அவர் கம்போஸ் செய்வதை ஷங்கர் ரசித்து பார்ப்பதுமான வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
’இந்தியன் 2’ படத்திற்காக போடப்பட்டிருக்கும் செட்டில் கேரவனின் ஷங்கர் மற்றும் அனிருத் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அனிருத் ’இந்தியன் 2’ படத்திற்கான பாடலை அனிருத் கம்போஸ் செய்து காட்ட ஷங்கர் அதை ரசிக்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஷங்கருடன் அனிருத் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#Indian2 - Anirudh mega Sambavam loading 🥵
— AmuthaBharathi (@CinemaWithAB) May 22, 2023
Shankar & Ani joining for the first time & seems the album is getting out banger🔥🔥pic.twitter.com/NGWL6Algic
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments