அனிருத் அட்டகாசமாக கம்போஸ் செய்த 'இந்தியன் 2' பாடல்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கான அட்டகாசமான ஒரு பாடலை கம்போஸ் செய்வது, அவர் கம்போஸ் செய்வதை ஷங்கர் ரசித்து பார்ப்பதுமான வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

’இந்தியன் 2’ படத்திற்காக போடப்பட்டிருக்கும் செட்டில் கேரவனின் ஷங்கர் மற்றும் அனிருத் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அனிருத் ’இந்தியன் 2’ படத்திற்கான பாடலை அனிருத் கம்போஸ் செய்து காட்ட ஷங்கர் அதை ரசிக்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஷங்கருடன் அனிருத் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜப்பான் ஒசாகா விருது… சிறந்த நடிகர் விஜய், விஜய்சேதுபதி என விருது பெறும் முக்கிய பிரபலங்கள்!

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ஒசாகா சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு அதில் சிறந்த நடிகர்,

'விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது? அஜித் ரசிகர்களுக்கு செம்ம குஷியான தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'விடாமுயற்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில்

'ஆர்.ஆர்.ஆர்' நடிகர் காலமானார்.. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இரங்கல்...!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அந்த இயக்குனர் இன்னும் 40 வருஷங்கள் படம் இயக்குவார்.. மிஷ்கின் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் 'அந்த இயக்குனர் இன்னும் 30 முதல் 40 வருடங்களுக்கு படத்தை இயக்குவார்' என வாழ்த்து தெரிவித்திருப்பது கோலிவுட் திரையுலகினர்களை

நாளை மறுநாள் கார்த்தி ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்..!

நாளை மறுநாள் நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.