மறுபடியும் ஒரு 'ஆலுமா டோலுமா' பாடல்.. அஜித்துக்காக அனிருத் செய்த தரமான சம்பவம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ’ஆலுமா டோலுமா’ என்ற சூப்பர் ஹிட் பாடலை கம்போஸ் செய்த நிலையில் மீண்டும் அஜித்துக்காக அதேபோன்ற ஒரு அட்டகாசமான பாடலை கம்போஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா’ என்ற சூப்பர் ஹிட் பாடல் என்பது தெரிந்தது. இந்த பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் பலர் இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்றும் அவை வைரல் ஆகியது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’ஆலுமா டோலுமா’ பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆக இருக்கும் நிலையில் இப்போதும் இந்த பாடலை கேட்டால் எழுந்து ஆட்டம் போடும் வகையில் தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், ஒரு ஆட்டம் போட வைக்கும் பாடலை கம்போஸ் செய்திருப்பதாகவும் ’ஆலுமா டோலுமா’ பாடலை விட இரு மடங்கு இந்த பாடலின் வேகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

’விடாமுயற்சி’ படத்தின் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இசை ரசிகர்கள் அனைவருக்கும் விருப்பமான பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் அர்ஜூன், ஆரவ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் இறுதியில் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

அஜித்தின் 'குட் பேட் அக்லி' பர்ஸ்ட் லுக் வெளியாக இந்த 700 பேர் காரணமா? ஆச்சரிய தகவல்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இப்போது வெளியிட படக்குழுவினர் திட்டமிடவில்லை

காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த சந்திராவின் ரீ-என்ட்ரி

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.இது இவரது ரசிகர்கள் பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளன...

என்னது சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரனா ?

சந்திரமுகி படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சிம்ரன் என தெரிய வந்துள்ளது.சில பல காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி கசிந்துள்ளது...

ஜெய் பட நடிகைக்கு ஆண் குழந்தை.. என்ன பெயர் தெரியுமா?

நடிகர் ஜெய் நடித்த திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, குழந்தையின் பெயரையும்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!

சிவகார்த்திகேயன் படம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த பதிவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.