பெண் வேட புகைப்படம் குறித்து அனிருத் தரப்பின் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில்தான் அனிருத் பெண் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை அனிருத் தரப்பு மறுத்துள்ளது. இந்த புகைப்படம் வேறு ஒரு நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டது என்றும், கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் பெண் வேடத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் வதந்தியே என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோலமாவு கோகிலா' படத்தில் அனிருத் நடிப்பது உண்மையென்றாலும், அந்த படத்தில் அனிருத்தின் கேரக்டர் குறித்து படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அனிருத் நடிப்பது மட்டுமின்றி இசையும் அமைத்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

திரையரங்க வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 16-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்ததால் திரையங்குகள் இயங்கவில்லை.

இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்: மத்திய அரசை போட்டுத்தாக்கும் கமல்

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சுணக்கம் காட்டி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றன

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண நாள் கொண்டாட்டம்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை நேற்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார்.

அடுத்த படம் குறித்து ராஜமெளலியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜமெளலியின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் தற்போது ஒரு சிறு வீடியோ மூலம் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

சக நடிகர்களுக்கு ஜாக்கிசான் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

ஜாக்கிசான் நடித்த 'குங்பூ யோகா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்களுக்கும் மேலும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் ஜாக்கி சான் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.