4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அனிருத்-ஹிப்ஹாப் தமிழா ஆதி: செம்ம பாடல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

4 ஆண்டுகளுக்கு பின் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இணைந்த பாடல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோ என இரு துறைகளிலும் ஜொலித்து வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது ’வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக ஆதிரா ராஜ் என்பவர் இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தை ஏஆர்கே சரவணன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். நான்கு வருடங்களுக்கு பின் மீண்டும் இருவரும் இணைந்த இந்த பாடலை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.