அனிருத்தின் 'அஜித் 57' பாடல் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

'தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதை அடுத்து முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்-காஜல் அகர்வால் பாடல் உள்பட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டவுள்ளன.
இந்நிலையில் இந்த பாடலை கம்போஸ் செய்யும் பணியில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது முதல் பாடலின் பணிகளை முற்றிலும் அனிருத் முடித்து இயக்குனரிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் தான் பல்கேரியாவில் படமாக்கப்படவுள்ளது.
FBI அதிகாரி மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் காஜல் அகர்வால், கருணாகரன், உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் 2017ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'கபாலி'க்கு அடுத்த வாரம் 'கத்திச்சண்டை'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்டங்களுடன் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது...

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த 'கபாலி'. ஒரு சிறப்பு பார்வை

கோலிவுட் திரையுலகில் தற்போது கிட்டத்தட்ட பாதி படங்களை பிரமாண்டம், பிரமாண்டம் என்றே கூறுகின்றனர்...

'கபாலி'க்காக விடுமுறை அறிவித்த அஞ்சலி பட நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையில் தரிசிக்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜூலை 22ஆம் தேதியை நோக்கி காத்திருக்கும்...

விஜய்யிடம் சந்தோஷ் நாராயணன் வைத்த வேண்டுகோள்

இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தான் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வரும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்...

'விஜய் 60' படத்திற்கு எம்.ஜி.ஆர் பட டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...