அனிருத்தின் 'அஜித் 57' பாடல் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

'தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதை அடுத்து முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்-காஜல் அகர்வால் பாடல் உள்பட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டவுள்ளன.
இந்நிலையில் இந்த பாடலை கம்போஸ் செய்யும் பணியில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது முதல் பாடலின் பணிகளை முற்றிலும் அனிருத் முடித்து இயக்குனரிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் தான் பல்கேரியாவில் படமாக்கப்படவுள்ளது.
FBI அதிகாரி மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் காஜல் அகர்வால், கருணாகரன், உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் 2017ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.