அனிருத்தின் 25வது படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் அனிருத் கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ’3’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் இந்த 10 ஆண்டுகளில் அவர் 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவரது 25வது படம் எது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
தனுஷ் நடித்த ’3’ என்ற திரைப்படத்தில் இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் அதன்பின்னர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, நானும் ரவுடிதான், உள்பட பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மிகக் குறுகிய காலத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த எட்டு படங்களுக்கு இந்த 10 ஆண்டுகளில் அவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அனிருத் இசையமைத்த 25வது படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த 10 ஆண்டுகளில் 25 திரைப்படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளது. மேலும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 years. 25 films. "N" no. Of chartbuster songs ❤️#KaathuVaakulaRenduKaadhal marks the Silver Jubilee film of our beloved Rockstar @anirudhofficial. Are you ready for the next single ?#Anirudh25 #Anirudh #AnirudhRavichander #KRKNextSingle @VigneshShivN pic.twitter.com/FKbHvDqvwj
— Rowdy Pictures (@Rowdy_Pictures) January 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments