இந்த போராட்டம் சத்யாகிரகத்தை ஞாபகப்படுத்துகிறது. பிரபல இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பீட்டாவுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை மெரீனாவில் இளளஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்றாவது நாளாக தொடரந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகினர் அனைவருமே ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அனிருத் இந்த போராட்டம் குறித்து தனது கருத்தை வீடியோ செய்தியாக சற்று முன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அனிருத் கூறியிருப்பதாவது, "எல்லோருக்கும் வணக்கம். ஜல்லிக்கட்டு நமது அடையாளம்,. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி நடந்து வருவதை பார்க்கும்போது சத்யாகிரகம் ஞாபகம் வருகிறது. தமிழனாக பிறந்ததற்கு பெருமை அடைகிறேன். இந்த போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு' என்று கூறியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி அறவழியில் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுத்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்று தந்தார்.பெற்றார். அந்த போராட்டத்திற்கு இணையாக இளளஞர்களின் இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது

More News

நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டத்தில் தல அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகில் இருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ஆதரவுக்குரல் கொடுத்து வரும் நிலையில் நாளை அதாவது ஜனவரி 20ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மௌன அறவழி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

போராட்டத்தை அடக்க ராணுவமா? சிம்புவின் வித்தியாசமான ஐடியா

இன்று தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டத்டை ஆரம்பித்த சிறுபொறிகளில் ஒருவர் நடிகர் சிம்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஜல்லிக்கட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான சிம்பு நேற்று இரவு 8 மணி முதல் தனது தி.நகர் வீட்டின் முன் அறப்போராட்டத்தை தொடங்கியுள்ளார்...

ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று தமிழகம் முழுக்க எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திரையுலகினர்களும் இந்த போராட்டத்தில் தமிழன் என்ற உணர்வுடன் பரிபூரண ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் தங்களை முன்னிறுத்தாமல் இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என்று உணர்வுடன் ஆதரவு கொடுத்து வருவது வரவேற்கத்தக்கதாக 

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் பற்றிய சிறு நெருப்பு இன்று சென்னை மெரீனா வரை காட்டுத்தீயாக கொழுந்துவிட்டு எரிகின்றது.

மெரீனா போராட்டத்தில் திடீர் திருப்பம். 1 மணி நேரத்தில் முக்கிய மாற்றம்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வுடன் நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு பல துறைகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்