இந்த போராட்டம் சத்யாகிரகத்தை ஞாபகப்படுத்துகிறது. பிரபல இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பீட்டாவுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை மெரீனாவில் இளளஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்றாவது நாளாக தொடரந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகினர் அனைவருமே ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அனிருத் இந்த போராட்டம் குறித்து தனது கருத்தை வீடியோ செய்தியாக சற்று முன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அனிருத் கூறியிருப்பதாவது, "எல்லோருக்கும் வணக்கம். ஜல்லிக்கட்டு நமது அடையாளம்,. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி நடந்து வருவதை பார்க்கும்போது சத்யாகிரகம் ஞாபகம் வருகிறது. தமிழனாக பிறந்ததற்கு பெருமை அடைகிறேன். இந்த போராட்டத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு' என்று கூறியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி அறவழியில் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுத்தான் இந்தியாவுக்கு விடுதலை பெற்று தந்தார்.பெற்றார். அந்த போராட்டத்திற்கு இணையாக இளளஞர்களின் இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது
#ISupportJallikattu #JusticeforJallikattu pic.twitter.com/fKlzgjzERv
— Anirudh Ravichander (@anirudhofficial) January 19, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com